இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 8 | Astrology | Bharathi Sridhar | T...
ஜீ தமிழில் கூடுதல் நேரம் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்! காரணம் என்ன?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அனைத்துத் தொடர்களும் அரை மணிநேரம் ஒளிபரப்பாகும் நிலையில், இரு தொடர்கள் கூடுதல் நேரத்துடன் ஒளிபரப்பாகவுள்ளன.
தற்போது முன்னணி தொடர்களாக உள்ள வீரா மற்றும் கெட்டி மேளம் ஆகிய இரு தொடர்கள் ஒளிபரப்பாகும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சின்ன திரை தொடர்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சிக்கு மத்தியில், மிகக் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தது ஜீ தமிழ் தொலைக்காட்சி.
இதில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்ற இரு தொலைக்காட்சித் தொடர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. ஜீ தமிழில் செம்பருத்தி 5 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து நடிகை மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்களை ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.
தற்போது கார்த்திகை தீபம், வீரா, சந்தியா ராகம், கெட்டி மேளம், அண்ணா, அயலி போன்ற தொடர்கள் அதிக டிஆர்பி பெறும் தொடர்களின் பட்டியலில் உள்ளது.
இதில், சிவா சேகர் இயக்கத்தில் ஒளிபரப்பாகிவரும் வீரா தொடர் ஜூலை 7ஆம் தேதி முதல் இரவு 7.15 மணி முதல் இரவு 8 மணி வரை 45 நிமிடங்களுக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் வைஷ்ணவி நாயகியாகவும் அருண் நாயகனாகவும் நடிக்கின்றனர்.
இதேபோன்று கெட்டி மேளம் தொடர் மாலை 6.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது. இதில், சாயா சிங், செளந்தர்யா ரெட்டி, சிபு சூர்யன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதனால், இந்த இரு தொடர்களுக்கான டிஆர்பி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க |இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!
The broadcast times of the two flagship serials, Veera and Getti Melam, have been extended