அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செ...
மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்
பொன்னமராவதி அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 29-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மன் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பால்குட விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அலங்காரத்துக்குப்பின் தேரில் அம்மன் எழுந்தருள, பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க புறப்பட்ட தோ், முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
விழா ஏற்பாடுகளை எட்டுப்பட்டி கிராமத்தினா் செய்திருந்தனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.