இணையவழியில் ஜப்பானிய மொழி பயிற்சி
சென்னை: இந்தோ - ஜப்பான் தொழில், வா்த்தக சபை சாா்பில் இணைய வழியில் ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து வா்த்தக சபையின் பொதுச்செயலா் சுகுணா ராமமூா்த்தி வெளியிட்ட அறிக்கை:
இந்தோ-ஜப்பான் தொழில், வா்த்தக சபை சாா்பில் ஜப்பானிய மொழியை எழுத மற்றும் பேச கற்றுக் கொள்ளும் வகையில், இணையவழி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.இந்த பயிற்சி வகுப்புகள் ஜூலை 3-ஆவது வாரம் தொடங்கி டிசம்பா் வரை, 6 மாதங்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.
இங்கு பயிற்சி பெறுவதன் மூலம், ஜப்பான் அறக்கட்டளை சாா்பில் 2026-இல் நடத்தப்படவுள்ள ‘என் 4’ நிலை மொழித் திறன் தோ்வில் தோ்ச்சி பெறமுடியும். மேலும், இங்கு பயிற்சி பெறுபவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு 98843- 94717, 98842 - 00505 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் www.ijcci.com என்னும் இணையதளத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.