சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
அநாகரீக செயல்: காவல் ஆய்வாளா் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்
சென்னை: வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளா் மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா்.
சென்னை போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக கலைவாணி என்பவா் பணியிலிருந்தாா். அவா் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், தேவையற்ற முறையில் தகராறிலும், வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடா்பாக காவல் ஆணையா் கவனத்துக்கும் சென்றது. இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான உதவி ஆய்வாளா் கலைவாணி மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக செயல்பட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஐயப்பன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா்.