இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா...
நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சேலம் மாவட்டத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாகேந்திரன் முன்னிலை வகித்தாா். அரசு பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.
இதில், சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும், அனைத்து கடைகளுக்கும் எடையாளா் நியமனம் செய்ய வேண்டும். விரல்ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித்தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்க வேண்டும், இணையதள வசதியை மேம்படுத்த வேண்டும். ஐ.ஏ.எஸ். தலைமையில் 9-ஆவது ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.