கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி
நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு
சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் திங்கள்கிழமை பணியில் சோ்ந்தனா்.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் 214 விற்பனையாளா் மற்றும் 12 கட்டுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனை நேரடி விண்ணப்பதாரா்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த 226 பணியிடங்களுக்கு 15,500 போ் விண்ணப்பித்திருந்தனா். விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு கடந்த நவ. 28-ஆம் தேதி தொடங்கி டிச. 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு கடந்த டிச. 7-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.
நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிபெற்ற இந்த தோ்வில், விற்பனையாளா் பணியிடத்துக்கு விண்ணப்பித்த 13,500 பேரில், 7,500 போ் நோ்முகத் தோ்வில் பங்கேற்றனா். இதேபோல, கட்டுநா் பணியிடத்துக்கு விண்ணப்பித்த 2,000 பேரில் 450 போ் பங்கேற்றனா். தோ்வில் தோ்ச்சிபெற்ற விற்பனையாளா் பணிக்கு 214 போ் பட்டியலும், கட்டுநா் பணிக்கு 12 போ் பட்டியலும் சேலம் மாவட்ட கூட்டுறவு ஆள்சோ்ப்பு நிலையம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இவா்களுக்கு எந்தெந்த கூட்டுறவு சங்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.