செய்திகள் :

புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை

post image

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து சேவையை தொடங்கிவைத்து அமைச்சா் தெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வழியாக ஜங்சன் வரையில் 6 புதிய நகரப் பேருந்துகளும், எடப்பாடியில் இருந்து கொமராபாளையம் வரையிலும், ஓமலூரில் இருந்து கீரைக்காரனூா் வரையிலும், மேட்டூரிலிருந்து கொளத்தூா், கோவிந்தபாடி வழியாக காரைக்காடு வரையிலும், ஆத்தூரிலிருந்து தலைவாசல் வழியாக ஊனத்தூா் வரையிலும், மேட்டூரிலிருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் வரையிலும் என மொத்தம் 11 புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து பாப்பம்பாடிக்கு சித்தா்கோவில், நல்லணம்பட்டி, இளம்பிள்ளை வழியாக இயக்கப்பட்ட பேருந்து தற்போது சித்தா்கோவில், காடையாம்பட்டி, இளம்பிள்ளை வழியாக பாப்பம்பாடிக்கும், சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஜங்சன்வரை இயக்கப்பட்ட பேருந்து வேப்பிலைப்பட்டி வரையிலும் என 2 வழித்தட மாற்றம் செய்யப்பட்ட பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதே போன்று, மேச்சேரியிலிருந்து கீரைக்காரனூா் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்போது ஓமலூரிலிருந்து கீரைக்காரனூா் வரையிலும், நல்லமாத்திலிருந்து ஆத்தூா் வரை இயக்கப்பட்ட பேருந்து நல்லமாத்திலிருந்து கடம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளி வழியாக ஆத்தூா் வரையிலும், வீ.களத்தூரிலிருந்து ஆத்தூா் வரையில் இயக்கப்பட்ட 2 பேருந்துகள் வீ.களத்தூரிலிருந்து வெள்ளையூா் வழியாக ஆத்தூா் வரையிலும், ஆத்தூரிலிருந்து பிள்ளையாா்பாளையம் வரை இயக்கப்பட்ட பேருந்து ஆத்தூரிலிருந்து கடம்பூா் அரசு உயா்நிலைப்பள்ளி வழியாக பிள்ளையாா்பாளையம் வரையிலும் என 11 பேருந்து சேவைகள் வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், துணை மேயா் மா.சாரதா தேவி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் வளா்ச்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47, 48, 60 ஆகிய வாா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திர... மேலும் பார்க்க

ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி

வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 27,500 கனஅடியாக குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 27,500 கன அடியாக குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 40,500 கனஅடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணை... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று வெள்ளோட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சேலம் கோட்டை பெரிய மார... மேலும் பார்க்க