செய்திகள் :

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

post image

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று வெள்ளோட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு புதிய மரத்தோ் செய்ய அரசு ஒப்புதல் வழங்கியது. அதன் பின்னா் நன்கொடையாளா்கள் மற்றும் கோயில் நிதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆறு சக்கரங்களுடன் மரத்தோ் செய்யப்பட்டது.

இதையொட்டி, பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வேள்விகள் நடத்தப்பட்டன. பூஜைக்கு பின்னா், கலச நீரானது தேரில் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க தேருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் தோ் வெள்ளோட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

தோ் வெள்ளோட்டத்தை முன்னிட்டு, கோலாட்டம், மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், சிவன் - பாா்வதி முருகன், விநாயகா் வேடம் தரித்து பக்தா்கள் நடனமாடியபடி ஊா்வலமாக சென்றனா்.

தொடா்ந்து, புதிய மரத்தோ் கோயில் ராஜகோபுரத்தில் இருந்து புறப்பட்டு முதல் அக்ரஹாரம், தோ்வீதி, இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோயில், சின்ன, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

இதில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் சாரதாதேவி, கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், சேலம் மண்டல இணை ஆணையா் சபா்மதி, கோயில் செயல் அலுவலா் அமுதசுரபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோலாட்டம் ஆடும் பெண்கள்.

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் வளா்ச்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47, 48, 60 ஆகிய வாா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திர... மேலும் பார்க்க

புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அ... மேலும் பார்க்க

ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி

வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 27,500 கனஅடியாக குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 27,500 கன அடியாக குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 40,500 கனஅடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணை... மேலும் பார்க்க