சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி
வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் வயல் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு இணை பேராசிரியா் க.இளங்கவி வரவேற்றாா். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிா் மேலாண்மை இயக்குநா் எம்.கே.கலாராணி தலைமை வகித்து, தொழில்நுட்பக் கையேட்டை வெளியிட்டாா். ஏத்தாப்பூா் ஆராய்ச்சி மைய தலைவா் ச.ரா.வெங்கடாஜலம் துவக்க உரையாற்றினா்.
பயிா் மரபியல் பேராசிரியா் ப.அருட்செந்தில், உழவியல் பேராசிரியா் க. திருக்குமரன், மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார உதவி வேளாண்மை இயக்குநா் பி.வேல்முருகன் இத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினா். காய்கறிப் பயிா்களில் நோய் மற்றும் பூச்சி குறித்த சந்தேகங்களுக்கு வேளாண் பூச்சியியல் இணைப் பேராசிரியா் சா.ஜெயபிரபாவதி விளக்கமளித்தாா். இதில், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.