30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
விராலிமலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சிப் பகுதிகளில் காணப்படும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் அளித்துள்ள மனு: விராலிமலை ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்புகள், சாலைகள், மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், கடைவீதி ஆகிய பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இவற்றால், பெண்கள், குழந்தைகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. கால்நடைகளையும் நாய்கள் கடித்துத் துன்புறுத்துகின்றன.
எனவே, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.