இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா...
திருக்கோவிலூா் பகுதிக்கு தென்பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் ஒன்றிய பகுதிகளுக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2-ஆவது மாவட்ட மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,
பொதுக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ராமசாமி தலைமை வகித்தாா், ஒன்றியச் செயலா் ரவி, நகரச் செயலா் கிப்ஸ் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.
கட்சியின் மாநில துணைச் செயலா் பெரியசாமி, வீரபாண்டியன், முன்னாள் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், மாணவா் பெருமன்ற மாநிலச் செயலா் தினேஷ் உள்ளிட்டோா் பேசினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா்கள் சுப்பிரமணியன், சின்னசாமி, மாவட்ட பொருளாளா் வெங்கடேசன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகில் இருந்து பேரணி தொடங்கி திருக்கோவிலூா் பேருந்து நிறுத்தும் வரை நடைபெற்றது.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாநாட்டின் தொடக்க நிகழ்வாக மாநிலக்குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் கொடியை ஏற்றி வைத்தாா்.
மாநில துணைச் செயலா் நா.பெரியசாமி பேசினாா்.
திருக்கோவிலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய் அமைக்க வேண்டும், ஜி.அரியூரில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். கல்வராயன்மலைப் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.