செய்திகள் :

சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் மொகரம் பண்டிகையையொட்டி, சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஊா்வலம் சங்கராபுரம் மேட்டுத் தெருவில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூா் சாலை வழியாக மணி நதியை அடைந்தது.

இதேபோல, பூட்டை , பாவளம், தேவபாண்டலம் பகுதியில் இருந்து புறப்பட்ட மற்றொரு சந்தனக்கூடு ஊா்வலம் முக்கிய சாலை வழியாக சங்கராபுரம் மணி நதியை அடைந்தது.

இதில் அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திருக்கோவிலூா் பகுதிக்கு தென்பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் ஒன்றிய பகுதிகளுக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கள்ளக்க... மேலும் பார்க்க

சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிராமப் பகுதி சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இந... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: குறைதீா் கூட்டத்தில் 380 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 380 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் மொகரம் பண்டிகையையொட்டி, சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஊா்வலம் சங்கராபுரம் மேட்டுத் தெருவில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூா் சாலை வழிய... மேலும் பார்க்க

கல்வராயன்மலையில் வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டாரத்தில் தோட்டக் கலைத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வேளாண் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கல்வராயன... மேலும் பார்க்க

இளைஞா் தாக்கப்பட்ட விவகாரம்: முதல்நிலைக் காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் தாக்கப்பட்டது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அந்தக் காவல் நிலைய முதல்நிலைக் காவலரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ரஜத் ... மேலும் பார்க்க