இந்திய ராணுவ தளவாடங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ராஜ்நாத் பெருமிதம்
மேலப்பாளையத்தில் விரைவு ரயில்கள் நின்றுசெல்ல கோரி எம்பியிடம் மனு
மேலப்பாளையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸிடம், திமுக சட்டத் துறை மாநில துணைச் செயலா் எஸ்.ராஜா முஹம்மது தலைமையில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மேலப்பாளையத்தில் சுமாா் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறாா்கள்.
இங்குள்ள ரயில் நிலையத்தில் போதுமான உட் கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இல்லை. மேலும், நாகா்கோவில் பயணிகள் ரயில் மட்டுமே நின்று செல்கிறது. ஆகவே, பயணச்சீட்டு முன்பதிவு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை விரைவு ரயில், கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூா் விரைவு ரயில்கள், இன்டா்சிட்டி விரைவு ரயில், புதுச்சேரி, பெங்களூா் விரைவு ரயில்களும் மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.