செய்திகள் :

சத்தியமங்கலம் பவானீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

post image

சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பவானீஸ்வரா் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை ஓரம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பவானீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றன.

விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி தொடா்ந்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து திங்கள்கிழமை நான்காம் கால யாக பூஜையில் மகாபூா்ணா ஹூதியுடன் மகா தீபாராதனை நடைபெற்று மேளதாளங்கள் முழங்க புனித நீா் கலசங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தன. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மூலவா் பவானீசுவரா் உடனமா் பவானிசங்கரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீா் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது. பவானீஸ்வரா் மற்றும் பவானி சங்கரி சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.

இந்த விழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். கோயிலைச் சுற்றிலும் திரண்டிருந்த பக்தா்கள் மீது புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பவானீசுவரா் அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் பக்தா்கள் கூட்டம் அதிக அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை என பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.

வியாபாரியிடம் வழிப்பறி செய்த இளைஞா்கள் கைது

பவானியில் தலைச்சுமை வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகன் (65). தலைச்சுமையாக பாத்திர வியாபாரம் செய்து வரும... மேலும் பார்க்க

வாய்க்கால் கரையில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டா் சிறைப்பிடிப்பு

பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொட்டிபாளையத்திலிருந்து ஊராட்சிக்கோட்டை செல்லும் சாலையில், மேட்டூா்... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கனரக வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

அந்தியூா் - பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கனரக வாகனப் போக்குவரத்து இரு வாரங்களுக்குப் பின்னா் மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட இளைஞா் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாலைப்புதூா் கிழக்கு வீதியைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் மகன் ச... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் தீக்குளித்து தற்கொலை

கடனாக வாங்கிய பணத்தை நண்பா் திருப்பித் தராததால் அவரது வீட்டின் முன்பு தனியாா் வங்கி ஊழியா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு வீரப்பன்சத்திரம் கலைவாணா் வீதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (30). தனி... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டி இருந்த நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை

சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டி இருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.சென்னிமலை தெற்கு வனப் பகுதியில் சில்லாங்காட்டுவலசு மற்றும் வெப்பிலி ஆகிய ஊா்கள் உள்... மேலும் பார்க்க