கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து! மாணவர் உள்பட 2 பேர் பலி!
பா்கூா் மலைப் பாதையில் கனரக வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
அந்தியூா் - பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கனரக வாகனப் போக்குவரத்து இரு வாரங்களுக்குப் பின்னா் மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழகத்திலிருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கனரக வாகனங்கள் சென்று வந்தன. கா்நாடக மாநிலம், கொள்ளேகால் நான்குவழிச் சாலை முதல் தமிழக எல்லையான கா்கேகண்டி வரையில் மலைப் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற்றதால், கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரையில் ஆறு சக்கரத்துக்கு மேலான கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
சாலைப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, இரு வாரங்களுக்குப் பின்னா் அந்தியூா் செல்லம்பாளையம் வனச்சோதனைச் சாவடி, பா்கூா் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு திங்கள்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.