டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்
இளைஞா் தற்கொலை
ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட இளைஞா் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாலைப்புதூா் கிழக்கு வீதியைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் மகன் சுகுமாா் (35). திருமணம் ஆகாதவா். பொறியியல் பட்டதாரியான இவா், கரூா் மாவட்டத்தில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். சுகுமாரின் தந்தை சௌந்தர்ராஜன் கடந்த ஜனவரி மாதம் சிறுநீரக செயல் இழப்பால் இறந்து விட்டாா்.
சுகுமாா் அண்மையில் மருத்துவமனையில் உடலைப் பரிசோதித்துள்ளாா். அப்போது, ரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதனால் மனவேதனை அடைந்த சுகுமாா் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாா்.
இதனை சுகுமாா் அவரது உறவினா் ஒருவருக்கு வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவில் தெரிவித்துள்ளாா். பின்னா், அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளாா்.
இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த உறவினா் தற்கொலைக்கு முயன்ற சுகுமாரை மீட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமாா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து கொடுமுடி போலீஸில் சுகுமாரின் தாய் புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].