செய்திகள் :

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

post image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமூகப் பிரச்னையை முன்வைத்து திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் ஜூலை 4 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கிங்டம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, வரும் ஜூலை 31 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான விடியோவையும் வெளியிட்டுள்ளது.

The new release date of the film Kingdom starring actor Vijay Deverakonda has been announced.

குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் எனக் கூறுவது வன்முறை: இயக்குநர் ராம்

குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் எனக் கூறுவது வன்முறை என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் ’பறந்து ... மேலும் பார்க்க

ஒரே நாளில் வெளியாகும் பிரபாஸ், ரன்வீர் சிங் படங்கள்!

பிரபாஸின் ராஜாசாப், ரன்வீர் சிங்கின் துரந்தர் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில்... மேலும் பார்க்க

கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2 படங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2 படங்களில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.தமிழின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித... மேலும் பார்க்க

சுகப்பிரசவம் குறித்து சின்ன திரை நடிகை நெகிழ்ச்சி!

சின்ன திரை நடிகை சமீரா ஷெரீஃப் தனக்கு சுகப்பிரசவம் நடந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இரண்டாவது முறையாக தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், கருவுற்ற காலத்தில் கடந்து வந்த கடினமான சூழல... மேலும் பார்க்க

கேதார்நாத் பயண அனுபவத்தைப் பகிர்ந்த பவித்ரா ஜனனி!

சின்ன திரை நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான பவித்ரா ஜனனி கேதார்நாத்திற்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டார். அதன் பயண அனுபவங்களை விடியோவாக ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார். அதில், கேதார்நாத் கோயிலுக்குச் ச... மேலும் பார்க்க

அசுரன் நடிகரின் உசுரே படத்தின் வெளியீட்டுத் தேதி!

அசுரன் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாடராக இருந்து அசுரன் படத்தில் நடிகராக அறிமுகமானவர் டீஜே அருணாச்சலம். தற்போது,... மேலும் பார்க்க