அசுரன் நடிகரின் உசுரே படத்தின் வெளியீட்டுத் தேதி!
அசுரன் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடராக இருந்து அசுரன் படத்தில் நடிகராக அறிமுகமானவர் டீஜே அருணாச்சலம். தற்போது, இவர் அறிமுக இயக்குநர் நவீன் டி கோபால் இயக்கியுள்ள உசுரே படத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ணா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகை ஜனனி நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவை மார்க்கி சாய் மேற்கொண்டுள்ளார். கிரண் ஜோஸ் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் காதலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உசுரே திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
The release date of the film Usure, starring actor Arunachalam, who is famous for his role in the film Asuran, has been announced.
இதையும் படிக்க: ஜீ தமிழில் கூடுதல் நேரம் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்! காரணம் என்ன?