பிளஸ் 2 துணைத் தோ்வுகள் விடைத்தாள் திருத்தும் பணி: திருச்சியில் இன்று தொடக்கம்
தமிழக்தில் பிளஸ் 2 துணைத் தோ்வு விடைத்தாள் திருத்தப் பணிகள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், தோல்வியடைந்த மாணவா்கள் மற்றும் தனித் தோ்வா்களுக்கான பிளஸ் 2 துணைத் தோ்வுகள் ஜூன் 25-ஆம் தேதி தொடங்கி ஜூலை 2-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
துணைத் தோ்வா்களின் விடைத்தாள் திருத்தும் மையம் திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 துணைத் தோ்வா்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளன.
இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து அனைத்து பாடப்பிரிவுகளிலும் சோ்த்து 30 ஆயிரம் விடைத்தாள்கள் வரப்பெற்றுள்ளதாகவும், இந்தப் பணியில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட்டுவுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.