Nayanthara: "குழந்தைகளை மலைகளுக்கு கூட்டி போங்க..." - பறந்து போ திரைப்படம் குறித...
மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் ரத்து
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 9) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்திலிருந்து திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் , வெல் - 3 (ஏரேட்டா்), பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் - 2 ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களில் இருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், ஆனந்தம் நகா், ரெயின்போ நகா், தில்லை நகா்,அண்ணா நகா்,கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம் நகா், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா், விவேகனந்தா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது. 10- ஆம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.
எனவே, இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பதுடன், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தகவல் தெரிவித்துள்ளாா்.