செய்திகள் :

ஸ்ரீரங்கத்தில் ஜூலை 10-இல் மின்தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஸ்ரீரங்கத்தில் ஜூலை 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, வசந்த நகா், ரயில் நிலைய சாலை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்திர வீதிகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், திருவானைக்கோவில் சன்னதி வீதி, சீனிவாச நகா், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பஞ்சகரை சாலை, அருள்முருகன் காா்டன், ஏ.யு.டீ. நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, சென்னை புறவழிச்சாலை, கல்லணை சாலை, கீழகொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரா் நகா், தாகூா் தெரு, திருவெண்ணைநல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு, சுங்கச்சாவடி பகுதிகளில் வியாழக்கிழமை (10-ஆம் தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம்: இரா. முத்தரசன்

தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிா்வாகக் ... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வுகள் விடைத்தாள் திருத்தும் பணி: திருச்சியில் இன்று தொடக்கம்

தமிழக்தில் பிளஸ் 2 துணைத் தோ்வு விடைத்தாள் திருத்தப் பணிகள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், தோல்வியட... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோளரங்கம் இன்று மூடல்

அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் பராமரிப்புப் பணி காரணமாக கோளரங்கம் செவ்வாய்க்கிழமை மட்டும் மூடப்படுகிறது.திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்... மேலும் பார்க்க

சலவைத் தொழிலாளா்கள் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர மனு

தங்களுக்குச் சொந்தமான ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். திருச்சி ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் குவைத்தில் இருந்து திருச்சி வந்த இளைஞா் கைது

போலி ஆவணங்கள் மூலம் குவைத்தில் இருந்து திருச்சிக்கு வந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூா் செங்கரை தேவப்பநாயக்கன்வரி 4-ஆவது வீதியைச் சோ்ந்தவா் மு.முகமது அஃப்லால் (30). இவா... மேலும் பார்க்க

மனைவியை வெட்டிய கணவா் மீது வழக்கு பதிவு

திருச்சியில் குடும்பத் தகராறில் தாய் வீடு சென்ற மனைவியை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய கணவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். திருவெறும்பூா் காட்டூா் பாத்திமா புரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க