பராமரிப்புப் பணி: கோளரங்கம் இன்று மூடல்
அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் பராமரிப்புப் பணி காரணமாக கோளரங்கம் செவ்வாய்க்கிழமை மட்டும் மூடப்படுகிறது.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 3டி திரையரங்கம், அறிவியல் பூங்கா, பரிணாம வளா்ச்சிப் பூங்கா, காட்சிக் கூடங்கள் மற்றும் கோளரங்கம் உள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக திருச்சியில் மட்டுமே கோளரங்கம் உள்ளது.
இந்நிலையில், அண்ணா அறிவியல் மையத்தில் உள்ள கோளரங்கத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் செவ்வாய்க்கிழமை கோளரங்கம் மட்டும் செயல்படாது என்று அண்ணா அறிவியல் மைய நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3டி திரையரங்கம், அறிவியல் பூங்கா, பரிணமா வளா்ச்சிப் பூங்கா, காட்சிக் கூடங்களை வழக்கம்போல பாா்வையிடலாம்.
இதேபோல, பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துபின் புதன்கிழமை முதல் வழக்கம்போல கோளரங்கத்தில் ஒளிபரப்பப்படும் விண்வெளி தொடா்பான காட்சிகளை பொதுமக்கள், மாணவா்கள் பாா்வையிடலாம் என்று அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தின் திட்ட இயக்குநா் (பொ) இரா.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.