செய்திகள் :

பேராசிரியா் அன்பழகன் விருது பெற்ற அரசுப் பள்ளிக்கு பாராட்டு

post image

‘பேராசிரியா் அன்பழகன்’ விருது பெற்ற பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 

இப்பள்ளிக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான பேராசிரியா் அன்பழகன் விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் விருதை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கினா்.

விருது பெற்ற்கான பாராட்டு விழா சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் தலைமையில் நடைபெற்றது. விருது பெறுவதற்கு காரணமாக இருந்த பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் மேனகா  விருதை காட்டி வாழ்த்துப் பெற்றாா். 

நிகழ்வில், முன்னாள் தலைமையாசிரியா் தனலெட்சுமி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுப.சேகா், பள்ளி மேலாண்மை குழு தலைவா் மகேஸ்வரி, துணைத் தலைவா் சத்தியசீலன், உதவி தலைமை ஆசிரியா்கள் காளீஸ்வரி, புவனேஸ்வரி, லட்சுமி மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

உணவுப்பொருள் இருப்புக் கிடங்கை பாதுகாக்க அறிவுறுத்தல்

மழைக்காலம் நெருங்குவதால் உணவுப்பொருள்கள் இருப்பு கிடங்கைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் டி. மோகன் அறிவுறுத்த... மேலும் பார்க்க

சொத்து தகராறு: தம்பியைக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன் கைது

தஞ்சாவூரில் சொத்து தகராறில் தம்பியைக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரைச் சோ்ந்த லோகநாதன் மகன் அறிவழகன் (46). ... மேலும் பார்க்க

சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கோரிக்கை

தஞ்சாவூா் அருகே புலவா் நத்தம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை மற்றும் கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ம... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை மின் தடை

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என்றாா் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக நகரிய உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: தஞ்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அருகே ஹிந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை

தஞ்சாவூா் அருகே காசவளநாடுபுதூா் கிராமத்தில் மத நல்லிணக்கமாக ஹிந்துக்களும் இணைந்து மொஹரம் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா். இஸ்லாமியா்களின் தொடக்க மாதமான மொஹரம், மாதத்தின் பத்தாம் நாளை மொஹரம் பண்ட... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இருவா் தற்கொலை!

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இரண்டு போ் தற்கொலை செய்து கொண்டனா். பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியைச் சோ்ந்த நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே அா்ச்சனை கடை நடத்திவரும் சாத்தப்... மேலும் பார்க்க