செய்திகள் :

'முருகர் மாநாட்டை நடத்திய பெருமை எங்களுக்கே உண்டு!' - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

post image

'திருச்செந்தூர் குடமுழுக்கு!'

திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, 'திமுக அரசு ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும்!' எனப் பேசியிருக்கிறார்.

சேகர் பாபு
சேகர் பாபு

'சேகர் பாபு பத்திரிகையாளர் சந்திப்பு!'

சேகர் பாபு பேசியதாவது, '5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் குடமுழுக்கில் கலந்துகொண்டதாக காவல்துறையினர் புள்ளிவிவரத்தை கொடுத்திருக்கின்றனர். இன்னமும் பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். நிதீமன்றங்களின் தலையீடையெல்லாம் தாண்டி அரும்பாடு பட்டு குடமுழுக்கை நடத்தி முடித்திருக்கிறோம்.

வெளிநாட்டு பக்தர்களே வியக்கும் அளவுக்கு நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறோம். 14 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கை நடத்தவிருக்கிறோம். நாங்கள்தான் வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கை நடத்தினோம். முதியோர்கள் அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட உண்டு உறைவிட வசதியை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம்.

சேகர் பாபு
சேகர் பாபு

நாங்கள் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து 3289 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கை நடத்தியிருக்கிறோம். 6800 கோடி அளவுக்கு பணிகளைச் செய்திருக்கிறோம். 12 ஆண்டுகள் நிறைவுற்ற அத்தனை திருக்கோயில்களுக்கும் ஆகமவிதிப்படி குடமுழுக்கை நடத்துவதுதான் இந்த அரசின் நோக்கம். தமிழ்க்கடவுள் முருகனுக்கென்று தனி மாநாட்டை நடத்திக் காட்டிய பெருமை எங்களுக்கு உண்டு. முருகனை பலரும் சொந்தம் கொண்டாடுவதால் நாங்கள் முருகனுக்கு என்ன செய்திருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்கிறோம்.' என்றார்.

`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!' - தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி ச... மேலும் பார்க்க

ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள்... மேலும் பார்க்க

``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"மிசாவில் உங்களை கைது செய்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம்.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு" என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னி... மேலும் பார்க்க

'நான் யாருன்னு தெரியல?' - திடீரென விசாரித்த அமைச்சர்... தெரியாமல் விழித்த அரசு பேருந்து ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை தனது அலுவல்களில் ஒன்றாக வைத்துள்ளார். அந்த வகையில், கோவையில் உள்ள கொடீச... மேலும் பார்க்க

இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோடை முருகன் கோயிலின் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.செல்வப்பெருந்தகைமூலவர... மேலும் பார்க்க