செய்திகள் :

‘மின்னல் முரளி’ நாயகியின் புதிய படம்: ஹீரோ யார் தெரியுமா?

post image

‘மின்னல் முரளி’ திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பிடித்த ஃபெமினா ஜார்ஜின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ சூப்பர் ஹீரோவாக நடித்த ‘மின்னல் முரளி’ படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் 2021இல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படத்தில் நடித்த ஃபெமினா ஜார்ஜ் புதிதாக ‘கரக்கம்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இதனை அவர் தமது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் ஸ்ரீநாத் பாசி கதாநாயகனுக்கு இணையானதொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கரக்கம் பட போஸ்டர்

கிம்பெர்லி ட்ரிணிடேட் மற்றும் அஞ்குஷ் சிங் தயாரிப்பாளர்களாக உள்ள இப்படம் ப்ளாக் டர்ட்டில் ப்ரொடக்சன்ஸ் மற்றும் ரோன் ஸ்டார்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் பேனர்களின் கீழ் உருவாகவுள்ளது. தமிழ் இசையமைப்பாளர் சாம் சி. எஸ். இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

படத்தின் முன்னோட்ட க்ளிம்ஸ் விடியோவை படக்குழு இன்று(ஜூலை 7) வெளியிட்டுள்ளது. அதில், இரவு நேரத்தில் மயானத்துக்கு காரில் ஒரு குழு செல்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது ஒரு ஹாரர் த்ரில்லர் படமாகவே ‘கரக்கம்’ எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Karakkam : Femina George's next Malayalam movie

நடிகர் மகேஷ் பாபுவுக்கு சிக்கல்! பண மோசடி வழக்கில் நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு பண மோசடி வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் ஜூலை 7-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.என்ன விவகாரம்?ஹைதராபாத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதா? ஜாமீன் மனு நாளை விசாரணை!

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கான விடை நாளை(ஜூலை 8) தெரிந்... மேலும் பார்க்க

மலையாள சினிமாவில் சாய் அபயங்கர்! அடுத்து என்ன தெரியுமா?

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் முதல் மலையாள திரைப்படம் பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது அடுத்த படைப்பு குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாய் அபயங்கர் முதல்முறையாக மலையாள படத்துக்கு இசையமைக... மேலும் பார்க்க

ஃப்ரீடம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14' எனப் பெயரிட்டுள்ளனர்.உண்மைக் கதைகளைத் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம்.ஜ... மேலும் பார்க்க

செல்வராகவன் புதிய திரைப்படம் துவக்கம் - புகைப்படங்கள்

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் நடிக்கவுள்ளார்.குஷி ரவி நாயகியாக இந்த படத்தில் இணைகிறார். ஒய். ஜி. மஹேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், தீபக், ஹேமா, லிர்த்திகா... மேலும் பார்க்க