செய்திகள் :

பாலா: "யாருக்காவது நல்லது செய்யணும்" - லாட்டரி வென்ற மனைவி; கொண்டாடிய அஜித் பட நடிகர்!

post image

மலையாள நடிகர் பாலா தனது மனைவியான கோகிலா காருண்யா லட்டரியில் 25,000 ரூபாய் வென்றதை சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு கொண்டாடியுள்ளார்.

அவருடைய லாட்டரி டிக்கெட் எண் 4935 என்பதைக் காண்பித்து, வீடியோ பதிவிட்டுள்ளார். "முதன்முறையாக, என் அதிர்ஷ்டம் நமது அதிர்ஷ்டம், ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" எனக் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.

இதுதான் கோகிலா முதன்முறையாக லாட்டரியை வெல்வது எனக் கூறியுள்ளார்.

பாலா - கோகிலா
பாலா - கோகிலா

வீடியோவில் பாலா பரிசுத் தொகையை கோகிலாவிடம் ஒப்படைப்பதைக் காண முடிகிறது. அவரிடம், "இதை வைத்து யாராவது ஒருவருக்கு நல்லது செய்" எனக் கூறுகிறார்.

கமண்டில் பலரும் அந்த தம்பதியின் தாராள மனதைப் பாராட்டியுள்ளனர்.

சிறுத்தை சிவா சகோதரரான பாலா மலையாளத்தில் புலிமுருகன், லூசிஃபர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடக்க காலத்தில் கலிங்கா, சவுண்ட் ஆஃப் பூட் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் அஜித் குமார் நடித்த வீரம் திரைப்படத்தில் அவரின் தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார்.

பாலா - கோகிலா தம்பதி

இரண்டு திருமணங்கள் தோல்வி அடைந்த நிலையில், கடந்த 2024 அக்டோபரில் மூன்றாவதாக கோகிலாவை மணந்தார் பாலா. 2010ம் ஆண்டு அவர் பாடகி அம்ருதா சுரேஷை மணந்தார், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 2019ம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.

2021ம் ஆண்டு எலிசபெத் உதயன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சட்டப்பூர்வமாக இவர்கள் திருமணம் நடைபெறவில்லை. 2023ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

கோகிலா அவரது உறவினர் மற்றும் தமிழ் பின்னணியைக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

புதிய தம்பதியான இருவரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வெளிப்படையாக, இயல்பாக பேசுவதனால் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார் கோகிலா. குறிப்பாக அவர் பாலாவை மாமா என அழைப்பதை அவர்களது ரசிகர்கள் விரும்புகின்றனர்.

'ப்ரேமலு 2' நிறுத்திவைப்பு! - பகத் பாசில் தயாரிப்பில் நிவின் பாலியை இயக்கும் 'ப்ரேமலு' இயக்குநர்!

கடந்தாண்டு மலையாளத்தில் வெளியாகியிருந்த 'ப்ரேமலு' திரைப்படம் கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் இப்படியான பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வரும் என அப்போதே அறிவிப்பு வெள... மேலும் பார்க்க

பல்டி: மலையாள சினிமாவில் 'சாய் அபயங்கர்' என்ட்ரி - மோகன்லால் வரவேற்பு!

மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகிவரும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் பல்டி. வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது. ஏற்கெனவே இந்த திரைப்படத்துக்கு நிலவும் பெர... மேலும் பார்க்க

Mollywood: நடிகை மீது இயக்குநர் புகார்; கைது செய்ய உத்தரவிட்ட கேரள நீதிமன்றம்

மலையாளத் திரையுலகின் முக்கியமானவர் பாலசந்திர மேனன். இயக்குநர், கதாசிரியர், நடிகர் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய இவர், பத்மஶ்ரீ விருதையும் வென்றிருக்கிறார். 1980-களில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.... மேலும் பார்க்க

Vedan: ``பணத்திற்காக சாதியை விற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை'' - விமர்சனத்துக்கு பதில் அளித்த வேடன்

2020-ம் ஆண்டு, ``நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் தனியிசைப்பாடலை வெளியிட்டார் ராப் பாடகர... மேலும் பார்க்க

Anupama: "மலையாள சினிமாவில் விமர்சனங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்" - அனுபமா வருத்தம்

பிரவீன் நாரயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'Janaki vs State Of Kerala' திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிற... மேலும் பார்க்க

Mammootty: ``மம்மூட்டிக்கு ஒரு சிறிய உடல்நலப் பிரச்னை..." - MP ஜான் பிரிட்டாஸ் சொல்வது என்ன?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. அதை முற்றிலும் மறுத்த நடிகர் சங்கம், ``நடிகர் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக வரும் செய்திகள் போலியானவை... மேலும் பார்க்க