செய்திகள் :

பல்டி: மலையாள சினிமாவில் 'சாய் அபயங்கர்' என்ட்ரி - மோகன்லால் வரவேற்பு!

post image

மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகிவரும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் பல்டி.

வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது.

ஏற்கெனவே இந்த திரைப்படத்துக்கு நிலவும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ் சினிமாவின் இளம் சென்ஷேனாக வலம்வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர், இதில் பணியாற்றுவதன் மூலம் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

விருது நிகழ்ச்சியில் சாய் அபயங்கர்
விருது நிகழ்ச்சியில் சாய் அபயங்கர்

ஆடியோ லேபிள் நிறுவனமான தின்க் மியூசிக் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், "மோனே சாய், மலையாள சினிமாவுக்கு வரவேற்கிறோம்... இது இசை ஆழமாக நேசிக்கப்படும் இடம், இசைக் கலைஞர்கள் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படுகிறார்கள்! "பல்டி" திரைப்படத்தின் இசை மூலம் பார்வையாளர்களின் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பும் பாக்கியம் உனக்கு கிடைக்கட்டும்!" எனப் பதிவிட்டுள்ளனர்.

வீடியோவில் மோகன்லால் "மோனே சாய்... வெல்கம் டு மலையாளம் சினிமா" என அழைப்பது போன்ற குரலும், அவர் சாய் அபயங்கரின் மல்டி டி-சர்டை வைத்திருக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

20 வயதேயாகும் சாய் அபயங்கர் தமிழ் சினிமாவில் பல பெரிய பட்ஜெட் படங்களில் கமிட் ஆகியிருப்பதுடன், தற்போது மலையாளத்திலும் கால் பதிக்கிறார்.

sai abhyankkar

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்புவின் திரைப்படத்திலும், சூர்யாவின் கருப்பு திரைப்படத்திலும், பிரதீப் ரங்கநாதான் - மமிதா பைஜு நடிக்கும் டூட் படத்திலும் பணியாற்றி வருகிறார் சாய்.

அல்லு அர்ஜுன் - அட்லி இணையின் பிரமாண்ட திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார் சாய் அபயங்கர்.

'ப்ரேமலு 2' நிறுத்திவைப்பு! - பகத் பாசில் தயாரிப்பில் நிவின் பாலியை இயக்கும் 'ப்ரேமலு' இயக்குநர்!

கடந்தாண்டு மலையாளத்தில் வெளியாகியிருந்த 'ப்ரேமலு' திரைப்படம் கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் இப்படியான பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வரும் என அப்போதே அறிவிப்பு வெள... மேலும் பார்க்க

Mollywood: நடிகை மீது இயக்குநர் புகார்; கைது செய்ய உத்தரவிட்ட கேரள நீதிமன்றம்

மலையாளத் திரையுலகின் முக்கியமானவர் பாலசந்திர மேனன். இயக்குநர், கதாசிரியர், நடிகர் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய இவர், பத்மஶ்ரீ விருதையும் வென்றிருக்கிறார். 1980-களில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.... மேலும் பார்க்க

Vedan: ``பணத்திற்காக சாதியை விற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை'' - விமர்சனத்துக்கு பதில் அளித்த வேடன்

2020-ம் ஆண்டு, ``நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் தனியிசைப்பாடலை வெளியிட்டார் ராப் பாடகர... மேலும் பார்க்க

Anupama: "மலையாள சினிமாவில் விமர்சனங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்" - அனுபமா வருத்தம்

பிரவீன் நாரயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'Janaki vs State Of Kerala' திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிற... மேலும் பார்க்க

Mammootty: ``மம்மூட்டிக்கு ஒரு சிறிய உடல்நலப் பிரச்னை..." - MP ஜான் பிரிட்டாஸ் சொல்வது என்ன?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. அதை முற்றிலும் மறுத்த நடிகர் சங்கம், ``நடிகர் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக வரும் செய்திகள் போலியானவை... மேலும் பார்க்க

Anupama: ``சிம்ரன், அசினுக்கு நடந்ததுதான் அனுபாமாவுக்கு நடக்கிறது!'' - சுரேஷ் கோபி ஓப்பன் டாக்

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அனுபம... மேலும் பார்க்க