செய்திகள் :

Anupama: ``சிம்ரன், அசினுக்கு நடந்ததுதான் அனுபாமாவுக்கு நடக்கிறது!'' - சுரேஷ் கோபி ஓப்பன் டாக்

post image

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அனுபமா பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'ப்ரேமம்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் அனுபமா. மலையாளத்தைத் தாண்டி கோலிவுட், டோலிவுட் என மற்ற சினிமாக்களிலும் அப்போதே 'ப்ரேமம்' படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன்
Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன்

அப்படத்தின் மூலம் அனுபமா பரமேஸ்வரன் மக்களிடையே பரிச்சயமானார். ஆனால், அதற்கடுத்து அவர் எதிர்பார்த்தபடி மலையாளத்தில் படங்கள் அமையவில்லை. அடுத்து அவர் சொற்ப மலையாளப் படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தார்.

இது குறித்து 'ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா' பட விழாவில் அனுபமா, "மலையாள சினிமாவில் பலரும் என்னை நிராகரித்தார்கள். எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்றே தெரியவில்லை என்று ட்ரோல் செய்தனர். அதையெல்லாம் தாண்டி எனக்கு வாய்ப்பளித்த இப்படத்தின் இயக்குநருக்கு நன்றி." என்று பேசினார்.

அனுபமா பேசிய விஷயம் குறித்து நடிகர் சுரேஷ் கோபி, "அனுபமா தனது மனதிலிருந்து பேசுகிறார். இது முதல் முறையல்ல. இதிலிருக்கும் உண்மை எனக்குத் தெரியும். சிம்ரன் ஒரு நடிகையாக இருந்தவர்.

மலையாளத் திரையுலகில் புறக்கணிக்கப்பட்டு விடப்பட்டவர். ஆனால், பின்னர் மலையாளப் படங்களில் முன்னணி கதாநாயகியாக அவரை நடிக்க வைக்க விரும்பி, முன்னணி இயக்குநர்கள் அவரைத் தேடிச் சென்றதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.

 சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

அசின் மற்றும் நயன்தாரா கேரளத்தைச் சேர்ந்தவர்கள். மலையாளத்தில் தங்கள் கரியரைத் தொடங்கினர். அவர்களைப் போன்ற நடிகைகள் மற்ற மொழிகளில்தான் முன்னணி கதாநாயகிகளாகப் புகழ்பெற்று மலர்ந்தனர்.

அனுபமாவின் வாழ்க்கையிலும் அதே நடக்கும். இதுதான் கர்மா. இது நிச்சயம் நடக்கும். அனுபமாவுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்." என்று கூறினார்.

Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு புகார்

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா நடிப்பில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘துடரும்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘துடரும்' படத்தில்...ஓட... மேலும் பார்க்க

Dileep: "காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மாறிவரும் நிலையைப் பிரதிபலிக்கும் கதை!" - நடிகர் திலீப்

மலையாளத் திரையுலகில் நடிகர் திலீப் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ப்ரின்ஸ் & ஃபேமிலி. இது நடிகர் திலீப்பின் 150-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரையரங்க... மேலும் பார்க்க

Premalu 2 Update: 'ப்ரேமலு 2' திரைப்படம் கைவிடப்படுகிறதா? - என்ன சொல்கிறார் படத்தின் தயாரிப்பாளர்

கடந்தாண்டு மலையாளப் படங்கள் பலவற்றை தமிழ் சினிமாவிலும் தூள் கிளப்பியிருந்தன. அந்த வரிசையில் 'ப்ரேமலு', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உட்பட பல மலையாள படைப்புகள் கடந்தாண்டு பல பக்கங்களிலும் கவனம் ஈர்த்திருந்தன. ச... மேலும் பார்க்க

Mohanlal: "பிரேம் நசீரைப் பற்றி அவர் தப்பா பேசினார்; அதனால அறைஞ்சுட்டேன்..." - மோகன்லால் ஓப்பன் டாக்

சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் தன்னுடைய கோபம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். ‘எம்புரான்’ படத்தைத் தொடர்ந்து ‘துடரும்’ படத்தில் நடித்திருந்... மேலும் பார்க்க

Lokah: சூப்பர் ஹீரோயின் ஆக களமிறங்கும் கல்யாணி பிரியதர்ஷன் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்

இந்திய திரைப்படங்களில் பெரும்பாலும் சூப்பர் ஹீரோ கதைப் படங்கள் குறைவாகவே வெளியானாலும் அதில் எல்லாமே ஆண்கள் தான் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கின்றனர். பெண்கள் சூப்பர் ஹீரோ ஜானரில் பெரிதாக நடித்ததில்லை. ... மேலும் பார்க்க

Shine Tom Chacko: ``அவருக்குப் பலமுறை அறிவுரையும் சொல்லியிருக்கிறேன்'' - நடிகர் ஆசிஃப் அலி வருத்தம்

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சமீபத்தில்கூட அஜித்தின் 'Good Bad Ugly' திரைப்படத்தில் சிறு கதாபாத்திரல் நடித்து கவனம் ஈர்த்திருந்தார். மலையாளம், தமிழ் என இரண்டு திரையுலகிலும் தற்... மேலும் பார்க்க