Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
கரூரில் நகா்ப்புற நல நலவாழ்வு மையங்கள் திறப்பு
கரூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட 4 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சிவாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகா், நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூா் குளத்துப்பாளையத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். மேலும், ரூ. 1 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 4 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும் திறந்து வைத்தாா். இதையடுத்து கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க. சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் வெ. கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.