செய்திகள் :

Kerala: மருத்துவமனை இடிந்து பெண் பலி; ``ஆபரேஷன், சிகிச்சை வசதி எங்கும் இல்லை'' - காங்கிரஸ் கண்டனம்

post image

கேரள மாநிலம் கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 68  ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டடத்தின் டாய்லெட் பகுதி நேற்று உடைந்து விழுந்தது.

டாய்லெட்டில் குளிக்கச் சென்ற தலையோலப்பறம்பு பகுதியைச் சேர்ந்த பிந்து(52) என்பவர் இறந்தார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர்.

பிந்துவின் மகள் நவமி (20) மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகாக அட்மிட் செய்யப்பட்டிருந்தார். மகளை உடனிருந்து கவனித்துவந்த பிந்து கட்டடம் இடிந்துவிழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வின்செண்ட்(11), ஜினுஷஜி(38), அமல் பிரதீப்(20) ஆகியோர் காயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கட்டடம் இடிந்து விழுந்ததும் மூன்றுபேர் மட்டுமே காயம் அடைந்ததாக ஆரம்பத்தில் அதிகாரிகள் கூறினர். இதனால், மீட்புப்பணிகள் நடத்தவில்லை. இதற்கிடையே அம்மாவை காணவில்லை என நவமி கூறியதைத் தொடர்ந்தே, விபத்து நடந்து 2 மணி நேரத்துக்குப்பின் மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டன.

மரணமடைந்த பிந்து

பிந்துவின் உடல் மீட்கப்பட்டது. சுகாதாரத்துறையின் அலட்சியத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடங்குவதாக டாக்டர் ஹாரிஷ் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டணம் இடிந்து விழுந்து பெண் மரணம் அடைந்த சம்பவம் கேரளா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தன்னை உடன் இருந்து பார்க்க வந்த தாயின் உடலை கட்டிப்பிடித்து ஒரு மகள் அழும் காட்சி என் நெஞ்சை பதற வைத்தது. மீட்பு பணிகள் செய்ய வேண்டிய நேரத்தில், அதைச் செய்யாமல் அவர் சுகாதாரத் துறையின் பெருமைகளை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.

காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்

காங்கிரஸ் எம்.எல்.ஏ சாண்டி உம்மன் அங்கு வந்து பிரச்சனை செய்த பிறகுதான் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்து பெண் இறந்ததற்கு இந்த அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அந்த குடும்பத்திற்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாய் அந்த குடும்பத்திற்கு வழங்க வேண்டும். அந்த பெண் குழந்தையின் முழு சிகிச்சை செலவுகளையும் அரசு ஏற்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

சுகாதாரத்துறை அமைச்சர் அந்த பதவியில் இனியும் தொடர தகுதி இல்லை. கேரளாவின் ஆரோக்கியத்துறையை அவர் வெண்டிலேட்டரில் அட்மிட் செய்துவிட்டார். மருந்து இல்லை, ஆபரேஷன் செய்த பிறகு தையல் போடுவதற்கு நூல் இல்லை என பல பிரச்னைகள் உள்ளன.

ஆபரேஷனுக்கு நூல், ஊசி, பஞ்சு ஆகியவற்றை நோயாளிகளே வாங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது கேரளாவில் இறப்பு சதவிகிதம் அதிகரித்துள்ளது. அனைத்து தொற்று நோய்களும் கேரளத்தில் உள்ளன.

கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பிரச்னைகள் உள்ளன. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எக்ஸ்பிரி டேட் முடிந்த மருந்துகளை வழங்கியதுதான் இந்த அரசு.

எனவே சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும். நிலம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு, முதலமைச்சர் பினராயி விஜயன் எதைப் பற்றியும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்" என்றார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

இதுபற்றி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், " கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தில் பிந்து மரணமடைந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அந்த குடும்பத்தின் துக்கம், எனது துக்கமாகும். அந்த குடும்பத்தின் துக்கத்தில் நான் பங்கெடுக்கிறேன். அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன். பிரியப்பட்ட பிந்துவின் குடும்பத்துக்கு அரசு ஆதரவாக இருக்கும்" என்றார்.

ஊட்டி: மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், அலறித்துடித்த பயணிகள்! என்ன நடந்தது?

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த 22 பேர் துக்க நிழவு ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் வாடகை வேன் மூலம் நேற்று காலை ஊட்டிக்குச் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வை முடித்துக் கொண்டு குன்னூர் மலை... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம் - சாத்தூர் அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் அதிகாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 8 அறைகள் வெட... மேலும் பார்க்க

தெலங்கானா தொழிற்சாலை விபத்தில் 34 பேர் உயிரிழப்பு; விபத்திற்கு காரணம் என்ன?

நேற்று காலை, 8.15 - 9.35 மணியளவில், தெலங்கானா, சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் இருந்த ரியாக்டர் வெடித்தது தான் இந்த விபத்திற்... மேலும் பார்க்க

Plane crash: ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதியா? - மத்திய இணையமைச்சர் முரளிதர் சொல்வதென்ன?

கடந்த மாதம் அகமதாபாத்தில் 274 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாசவேலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் த... மேலும் பார்க்க

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் மூவர் பலி; மன்னிப்பு கேட்ட ஒடிஷா முதல்வர்

இன்று (29.06.2025) ஒடிஷாவில் நடைபெற்ற பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட நெருக்கடியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். பசந்தி சாஹு, பிரேமகாந்த் மொகந்தி மற்றும் பிரவதி தாஸ் ... மேலும் பார்க்க

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்; கதவு திறந்து நோயாளியுடன் நடுரோட்டில் விழுந்த ஸ்ட்ரெச்சர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். குன்னூர் நகரின் நுழைவு... மேலும் பார்க்க