செய்திகள் :

ஹிந்திக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே!

post image

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியில் சிவசேனை(யுபிடி) தலைவர்உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்தி திணிக்கப்பட்டதற்கு சிவசேனை(யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்கட்சியினரின் அழுத்தத்தினால் மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

இதையொட்டி மும்பையில் இன்று தாக்கரே சகோதரர்கள் இருவரும் ஒரே மேடையில் வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். இருவரும் கைகோர்த்து கட்டியணைத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

"ஹிந்தி வெறும் 200 ஆண்டு கால வரலாறு கொண்ட மொழி. ஹிந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 3-வது மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" என ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.

ஹிந்திக்கு எதிரான போராட்டத்தில் தாக்கரே சகோதரர்கள் இருவரும் இணைந்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே. பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன்தான் ராஜ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.

Brothers Uddhav Thackeray and Raj Thackeray share a hug as Shiv Sena (UBT) and Maharashtra Navnirman Sena (MNS) are holding a joint rally against hindi imposition in maharashtra.

அனைத்து பக்தர்களின் பாதுகாப்பும் எங்கள் முன்னுரிமை: துணைநிலை ஆளுநர்

ஜம்மு-காஷ்மீரில் யாத்திரைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தர்களின் பாதுகாப்பும் எங்களது முன்னுரிமை என்று மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தொடங்கி ஆகஸ்... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவால் அவர் ஜூன் 23ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள தனியா... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற ரசாயன ஆலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிகாச்சி மருந்து ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற வெடி ... மேலும் பார்க்க

’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்?

தரம் குறைந்த ஹெல்மெட்களால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ‘நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறை’ சனிக்கிழமை(ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தலைக்கவசம் அணிந்துகொ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் உள்ள சந்தர்கோட் லங்கர் தளத்திற்கு அருகே அமர்நாத் யாத்திரைக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த வ... மேலும் பார்க்க

பௌத்த, சீக்கியர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியுடன் யாத்திரை திட்டம்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் பௌத்த, சீக்கிய பக்தர்களுக்கு ஆன்மிக பயணத்தை எளிதாக்கும் வகையில் இரண்டு யாத்திரை உதவித் திட்டங்களைத் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மறு ஆய்வுக் க... மேலும் பார்க்க