ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் சாதனை முறியடிப்பு!
அனைத்து பக்தர்களின் பாதுகாப்பும் எங்கள் முன்னுரிமை: துணைநிலை ஆளுநர்
ஜம்மு-காஷ்மீரில் யாத்திரைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தர்களின் பாதுகாப்பும் எங்களது முன்னுரிமை என்று மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தொடங்கி ஆகஸ்ட் 9 நடைபெற உள்ளது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், ரம்பன் மாவட்டத்தில் இன்று காலை ஐந்து பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்முவின் பகவதி நகரிலிருந்து தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் அடிப்படை முகாமிற்குச் செல்லும்போது, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சந்தர்கோட் அருகே காலை 8 மணியளவில் வாகனத் தொடரணியில் இருந்த பேருந்துகளில் ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் 36 பக்தர்கள் சிறு காயத்துடன் உயிர்த் தப்பினர். காயமடைந்தவர்கள் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். அதன்பிறகு தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள 3,880 மீட்டர் குகைக் கோயிலை நோக்கி பக்தர்கள் பயணத்தைத் தொடங்கினர்.
இதுதொடர்பாக துணை நிலை ஆளுநர் கூறுகையில்,
சிவபெருமானின் அருளால், அனைத்து பக்தர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அனைத்து பக்தர்களின் பாதுகாப்பும் எங்கள் முன்னுரிமை. அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வாகனங்களுக்கு விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு சோதனைகளை உறுதி செய்யவும், யாத்திரை பாதையில் உணவு மற்றும் மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha has said that the safety of every pilgrim going on pilgrimage is our priority.