செய்திகள் :

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இலங்கைக்கு 249 ரன்கள் இலக்கு!

post image

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 5) கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இருவர் அரைசதம்; 249 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய வங்கதேசம் 45.5 ஓவர்களின் முடிவில் 248 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் 69 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தௌஹித் ஹிரிடாய் 51 ரன்களும், தன்சிம் ஹாசன் சாகிப் 33* ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா மற்றும் சரித் அசலங்கா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

Bangladesh were bowled out for 248 runs in the second ODI against Sri Lanka.

இதையும் படிக்க: யு-19 நான்காவது ஒருநாள்: சதம் விளாசி அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!

ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் சாதனை முறியடிப்பு!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போ... மேலும் பார்க்க

அதிவேக சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை: இங்கிலாந்துக்கு 364 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் விளாசி இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளைய... மேலும் பார்க்க

யு-19 நான்காவது ஒருநாள்: சதம் விளாசி அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான 4-வது ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ... மேலும் பார்க்க

உணவு இடைவேளை: 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில... மேலும் பார்க்க

சதம் அடிப்பதில் உறுதியாக இருந்தேன்: ஹாரி ப்ரூக்

சதம் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் விலகல்!

இந்திய மகளிரணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ளார்.இந்திய மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட த... மேலும் பார்க்க