கேப்டன் ஷுப்மன் கில் அபாரம்; இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு!
உணவு இடைவேளை: 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 180 ரன்கள் முன்னிலை பெற்றது.
357 ரன்கள் முன்னிலை
180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 ரன்கள், கருண் நாயர் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் கடந்தார். அவர் 84 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 2 விக்கெட்டுகளையும், பிரைடான் கார்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். கேப்டன் ஷுப்மன் கில் 24 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
உணவு இடைவேளையின்போது, இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது.
India took a 357-run lead at the lunch break in the second Test against England.
இதையும் படிக்க: சதம் அடிப்பதில் உறுதியாக இருந்தேன்: ஹாரி ப்ரூக்