செய்திகள் :

யு-19 நான்காவது ஒருநாள்: சதம் விளாசி அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!

post image

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான 4-வது ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்று (ஜூலை 5) நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். ஆயுஷ் மாத்ரே 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, வைபவ் சூர்யவன்ஷியுடன் விஹான் மல்ஹோத்ரா ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 52 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவரது விக்கெட்டினை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடியதைப் போன்று நான்காவது போட்டியிலும் சூர்யவன்ஷி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விஹான் மல்ஹோத்ரா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

35 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Vaibhav Suryavanshi impressed with a stunning century in the 4th Under-19 ODI against England.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் விலகல்!

கேப்டன் ஷுப்மன் கில் அபாரம்; இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில்... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் சாதனை முறியடிப்பு!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போ... மேலும் பார்க்க

அதிவேக சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை: இங்கிலாந்துக்கு 364 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் விளாசி இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளைய... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இலங்கைக்கு 249 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 5) கொழும்புவில் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

உணவு இடைவேளை: 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில... மேலும் பார்க்க

சதம் அடிப்பதில் உறுதியாக இருந்தேன்: ஹாரி ப்ரூக்

சதம் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது... மேலும் பார்க்க