செய்திகள் :

கேப்டன் ஷுப்மன் கில் அபாரம்; இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு!

post image

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 180 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஷுப்மன் கில் அபாரம்; 608 ரன்கள் இலக்கு

180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, நான்காம் நாள் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி, அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.

இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 607 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இந்திய அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா 69* ரன்களும், ரிஷப் பந்த் 65 ரன்களும் எடுத்தனர். கே.எல்.ராகுல் 55 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் மற்றும் சோயப் பஷீர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிரைடான் கார்ஸ் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறது.

England have been set a target of 608 runs to win the second Test against India.

இதையும் படிக்க: ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் 54 ஆண்டுகால சாதனை முறியடிப்பு!

ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் சாதனை முறியடிப்பு!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போ... மேலும் பார்க்க

அதிவேக சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை: இங்கிலாந்துக்கு 364 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் விளாசி இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளைய... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இலங்கைக்கு 249 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 5) கொழும்புவில் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

யு-19 நான்காவது ஒருநாள்: சதம் விளாசி அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான 4-வது ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ... மேலும் பார்க்க

உணவு இடைவேளை: 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில... மேலும் பார்க்க

சதம் அடிப்பதில் உறுதியாக இருந்தேன்: ஹாரி ப்ரூக்

சதம் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது... மேலும் பார்க்க