செய்திகள் :

நீரஜ் சோப்ரா சாம்பியன்

post image

இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, தாம் முதல் முறையாக நடத்திய நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் ஆனாா்.

பெங்களூரில் உள்ள ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், நீரஜ் சோப்ரா தனது 3-ஆவது முயற்சியில் 86.18 மீட்டரை எட்டி முதலிடத்தை உறுதி செய்தாா். கென்ய வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான ஜூலியஸ் யெகோ சிறந்த முயற்சியாக 84.51 மீட்டருடன் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

இலங்கையின் ருமேஷ் பதிராகே 84.34 மீட்டருடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினாா். இந்திய தடகள சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன், நீரஜ் சோப்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்போா்ட்ஸ் ஆகியோா் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் 12 போட்டியாளா்கள் பங்கேற்றனா். இதில் 7 போ் சா்வதேச போட்டியாளா்களும், 5 போ் நீரஜ் சோப்ரா உள்பட இந்தியா்களும் ஆவா்.

இந்தப் போட்டிக்கு உலக தடகள அமைப்பு, ‘ஏ’ அந்தஸ்து வழங்கியுள்ளது. பாரீஸ் டைமண்ட் லீக், போலந்தின் கோல்டன் ஸ்பைக் ஆகிய போட்டிகளில் சாம்பியனான நீரஜ் சோப்ராவுக்கு, நடப்பு சீசனில் இது 3-ஆவது பட்டமாகும்.

ரஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் எப்போது?

ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள்பிரண்ட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா அனிமல், புஷ்பா திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.தெலுங்குப... மேலும் பார்க்க

பராசக்தி மேக்கிங் விடியோ!

இயக்குநர் சுதா கொங்கராவின் பிறந்த நாளுக்காக பராசக்தி படக்குழு மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது. இறுதிச் சுற்று, சூரரைப் போற்று என்ற வெற்றிப் படங்களின் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி எனு... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை: பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

கிளப் உலகக் கோப்பையில் ரியல் மாட்ரிட், பிஎஸ்ஜி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. காலிறுதியில் ரியல் மாட்ரிட், டார்ட்மண்ட் ... மேலும் பார்க்க

அரையிறுதிக்கு முன்னேறியது செல்ஸி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செல்ஸி 2-1 கோல் கணக்கில் பல்மெய்ராஸை சனிக்கிழமை சாய்த்தது.இந்த ஆட்டத்தில் முதலில் செல்ஸி தரப்பில் கோல் பால்மா் 16-ஆவது நிமிஷ... மேலும் பார்க்க

ரேப்பிட் பிரிவில் குகேஷ் வெற்றி

குரோஷியாவில் நடைபெறும் சூப்பா் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவின் முடிவில் இந்தியாவின் டி.குகேஷ் வெற்றி பெற்றாா்.நடப்பு உலக சாம்பியனான குகேஷ், கடைசி சுற்றில் அமெரிக்கா... மேலும் பார்க்க

அரையிறுதியில் ஸ்ரீகாந்த்

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் அவா், 21-18, 21-19 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில... மேலும் பார்க்க