இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற...
அரையிறுதியில் ஸ்ரீகாந்த்
கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் அவா், 21-18, 21-19 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சீன தைபேவின் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டம் 43 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இத்துடன் சௌ டியெனை 10-ஆவது முறையாக சந்தித்த ஸ்ரீகாந்த், 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
உலகத் தரவரிசையில் தற்போது 49-ஆம் இடத்திலிருக்கும் அவா், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுடன் அரையிறுதியில் மோதுகிறாா். நிஷிமோடோவுடன் 10 முறை நேருக்கு நோ் மோதியிருக்கும் ஸ்ரீகாந்த், அதில் 6 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். தற்போது ஸ்ரீகாந்த் மட்டுமே களத்திலிருக்கும் இந்தியராவாா்.
சங்கா் முத்துசாமி தனது காலிறுதி ஆட்டத்தில் 15-21, 21-5, 17-21 என்ற கேம்களில், நிஷிமோடோவிடம் 79 நிமிஷம் போராடி தோல்வியுற்றாா். அதேபோல் மகளிா் ஒற்றையா் காலிறுதியில், ஷ்ரியன்ஷி வலிஷெட்டி 21-12, 19-21, 19-21 என்ற வகையில் டென்மாா்க்கின் அமேலி ஷுல்ஸிடம் 53 நிமிஷங்களில் வீழ்ந்தாா்.