செய்திகள் :

முதியோா், பெண்கள் இல்லங்கள் பதிவு: தமிழக அரசு அறிவுறுத்தல்

post image

முதியோா், பெண்களுக்கான இல்லங்களைப் பதிவு செய்வதுடன், உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் விடுதிகள்-இல்லங்கள், முதியோா் இல்லங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதற்கென தமிழ்நாடு இணைய சேவை முகப்பில் ஒரு பிரத்யேக சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவை வழியாக, முதியோா் இல்லங்களைப் பதிவு செய்வதுடன், பெண்களுக்கான இல்லங்கள் பதிவு மற்றும் உரிமங்களுக்கு விண்ணப்பித்து அவற்றைப் பெறலாம். அத்துடன் பணிபுரியும் மகளிா் விடுதிக்கான உரிமம் அதன் வழியே வழங்கப்படும்.

சமூக நலத் துறையின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள், தங்களுடைய உரிமங்கள் காலாவதியாகும்போது புதிய இணையதள நடைமுறையைப் பயன்படுத்தி உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

நாமக்கல்: நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டனர்.நாமக்கல் தில்லைபுரம் பகு... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,500 கன அடி!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது.இன்று(ஜூலை 7) காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 ... மேலும் பார்க்க

பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.அன்புமணி... மேலும் பார்க்க

தக்காளி விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மக்கள்!

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று(ஜூலை 7) ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை... மேலும் பார்க்க

நள்ளிரவில் பரபரப்பு! அன்னவாசல் அருகே பற்றி எரிந்த காட்டுத் தீ!

அன்னவாசல் அருகே தீடீரென்று செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ளது வயலோகம். இங்குள்ள பெரிய குளத்தை சுற்றி ஆள் உயரத்துக்கு செ... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஜாமீன் கோரி நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோா் பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். கோகைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில்... மேலும் பார்க்க