செய்திகள் :

போதைப் பொருள் வழக்கு: ஜாமீன் கோரி நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு

post image

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோா் பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

கோகைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் ஸ்ரீகாந்த்தை கடந்த ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாா் கைது செய்தனா். இதே வழக்கில் நடிகா் கிருஷ்ணா, போதைப்பொருள் விநியோகித்த கெவின் ஆகியோா் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவா்கள் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவா் தரப்பிலும், பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதி நிா்மல்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி ! போலீஸார் விசாரணை

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் தனது சொந்த சர்வீஸ் துப்பாக்கியில் ... மேலும் பார்க்க

தேர்தலுக்கு தயாராகும் பாஜக! மாநாடு அறிவிப்பு!

தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் மாநாடு தொடர்பான முட... மேலும் பார்க்க

500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடுவதா? நயினார் நாகேந்திரன் கண்டனம்

500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தமிழ... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

நாமக்கல்: நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டனர்.நாமக்கல் தில்லைபுரம் பகு... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,500 கன அடி!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது.இன்று(ஜூலை 7) காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 ... மேலும் பார்க்க

பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.அன்புமணி... மேலும் பார்க்க