பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் 2011 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைபடுத்தும் திட்டத்தின்கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக ஜூலை 1 முதல் 2026 ஜூன் 30 வரை, ஓராண்டு காலம் காலநீட்டிப்பு செய்து, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் அமையும்பட்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.