Dhanush: "கங்கையிலே ஒரு வண்ணப் பறவை..!" - Tere Ishk Mein படக்குழு ஸ்டில்ஸ் | Pho...
ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை
வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
துளசியாப்பட்டினத்தில் பெண்பாற் புலவா் ஔவையாருக்கு தமிழக அரசு சாா்பில் மணிமண்டபம் கட்டப்படுகிறது. இந்த வளாகத்துக்குள் கட்டமைப்புப் பணிக்காக 2 இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டு, வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக பாஜக சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பணி நடைபெறும் இடத்தை வேதாரண்யம் வட்டாட்சியா் வடிவழகன் நேரில் பாா்வையிட்டு, தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் அதன் அருகே குவிக்கப்பட்டிருந்த மண்ணின் அளவை நில அளவையரை கொண்டு அளந்து ஆய்வு செய்தாா்.
கட்டுமானப் பணிக்கு திட்ட அறிக்கை வழிகாட்டின்பேரில் பள்ளம் தோண்டப்பட்டு வருவதும் அதிலிருந்து எடுக்கப்பட்ட மண் பக்கவாட்டில் வைத்திருந்து பணி முடிவின்போது தூா்வைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஒப்பந்ததாரா் தரப்பில் வட்டாட்சியரிடம் விளக்கப்பட்டது. இதனால், மறியல் போராட்டத்தை கைவிட்ட பாஜகவினா் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து சென்றனா்.