பாஜக நண்பன், திராவிட மாடலுக்குத் தோழன்; சென்னையை ஆக்கிரமித்து மிரட்டும் குஜராத் ...
கியூட்-யுஜி தேர்வு முடிவுகள் வெளியீடு
நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (கியூட்-யுஜி) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட்-யுஜி தேர்வை தேசயி தேர்வு முகமை நடத்தியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில், தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியில், தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்தே, பொதுப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க முடியும். இது குறித்து தேசிய தேர்வு முகமை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கியூட்-யூஜி நுழைவுத் தேர்வுக்கான விடைக் குறிப்புகள் ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவா்களை சோ்க்க பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை (கியூட்) மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
அந்தவகையில், இளநிலை படிப்புகளுக்கான நடப்பு ஆண்டு கியூட்-யுஜி நுழைவுத் தோ்வு மே 13-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடத்தி முடித்தது தேசிய தோ்வு முகமை.
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்பட்டுள்ளது.