செய்திகள் :

கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

post image

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 28ல் கோட்டக்கல் பகுதியில் நிபா வைரஸ் தொற்றுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவருடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதேபோன்று மலப்புரம் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 6 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Health authorities in Kerala on Friday issued an alert across three northern districts after two people showed possible signs of Nipah virus infection, reviving fears of an outbreak that the state has battled in the past.

நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.அதன்படி, விக்டோரியா லேஅவுட்டின் குடியிருப்பு வீடு, பெங்களூருவில... மேலும் பார்க்க

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க

அமர்நாத்: 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் !

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.இதுகுறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இதுவரை, தகவல்களின்படி... மேலும் பார்க்க

மொழியின் பெயரால் வன்முறை கூடாது! - ஃபட்னவீஸ் எச்சரிக்கை

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எச்சரித்துள்ளார். மேலும், மராத்தி மொழியின் பெருமைக்கான வன்முறையில் ஈடுபடுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவனால் பரபரப்பு நிலவியது. ஜார்க்கண்ட் மாநிலம், பர்ககானாவிலிருந்து வாரணாசிக்கு தம்பதியினர் வாரணாசி எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை கிளம்பியுள்ளனர். ... மேலும் பார்க்க