செய்திகள் :

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !

post image

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவனால் பரபரப்பு நிலவியது.

ஜார்க்கண்ட் மாநிலம், பர்ககானாவிலிருந்து வாரணாசிக்கு தம்பதியினர் வாரணாசி எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை கிளம்பியுள்ளனர். புர்குண்டா மற்றும் பத்ரது ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் வந்தபோது, ​​அந்தப் பெண் தனது கணவரால் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக தண்ணீர் கிடந்த பள்ளத்தில் விழுந்ததால் காயமுடன் உயிர் தப்பினார். ரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்கள் அவரை மீட்டு உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மருத்துவர்கள் ராஞ்சி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

பர்கானா ரயில்வே காவல் அதிகாரி னோகர் பர்லா கூறுகையில், காயமடைந்த பெண் ஒரு பள்ளத்தில் இருப்பதை ரயில்வே லைன் ஊழியர் ஒருவர் பார்த்து, பத்ரதுவில் உள்ள ரயில்வே போலீஸுக்கு தகவல் அளித்தார் என்றார்.

உத்தரபிரதேச மாநிலம் தேவரியாவைச் சேர்ந்த காயமடைந்த பெண் குஷ்பூ குமாரி, தனது வாக்குமூலத்தில், ஒரு வருடம் முன்பு திருமணம் செய்து கொண்ட தனது கணவருடன் பர்கானா சந்திப்பிலிருந்து வாரணாசிக்கு பயணித்துக்கொண்டிருந்தேன்.

தன்னைக் கொல்லும் நோக்கிலே, தனது கணவர் வேகமாக சென்ற ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரி மேலும் கூறினார்.

Summary

A 25-year-old man from Uttar Pradesh on Friday allegedly pushed his wife out of a running train in Jharkhand, a police officer said.

இதையும் படிக்க.. 148 ஆண்டுகளில்.. வரலாற்றுச் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க

அமர்நாத்: 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் !

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.இதுகுறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இதுவரை, தகவல்களின்படி... மேலும் பார்க்க

மொழியின் பெயரால் வன்முறை கூடாது! - ஃபட்னவீஸ் எச்சரிக்கை

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எச்சரித்துள்ளார். மேலும், மராத்தி மொழியின் பெருமைக்கான வன்முறையில் ஈடுபடுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் ... மேலும் பார்க்க

மாதவிடாய் நாப்கின்களில் ராகுல் காந்தியின் படம்! பிகாரில் புதிய சர்ச்சை!

பிகாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மாதவிடாய் நாப்கின்களில், ராகுல் காந்தியின் படம் அச்சிடப்பட்டுள்ளதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். பிகாரில் காங்கிரஸ... மேலும் பார்க்க

கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஜூன் 28ல் கோட்டக்கல் பகுதியில் நிபா வைரஸ் தொற்றுட... மேலும் பார்க்க