பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!
கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வெகுவாக பாதிக்கும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த அதன் நிறுவனத்தை மூடுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக மறுசீரமைப்பு மற்றும் கிளவுட் அடிப்படையிலான, தடத்திற்கு மாறுவதாக தெரிவித்தது.
2023ஆம் ஆண்டுக்குப் பிறகு, தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் உலகளவில் சுமார் 9,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் உள்ள மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவன மேலாளரான ஜவாத் ரெஹ்மான், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அரசையும், தகவல் தொழில்நுட்ப அமைச்சரையும் வலியுறுத்தி உள்ளார். இந்த வெளியேற்றம் தற்போதைய வணிக சூழலை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் ஒரு காலத்தில் பாகிஸ்தானில் விரிவாக்கம் செய்வதற்காக பரிசீலித்ததாகவும், ஆனால் உறுதியற்ற தன்மை காரணமாக 2022 பிற்பகுதியில் வியட்நாமைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
வாய்ப்பை இழந்தோம் என்று லிங்க்ட்-இன் இல் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!