செய்திகள் :

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

post image

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. நீளமுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. நீளமுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.

நடப்பாண்டு கூடுதல் பாதுகாப்புடன் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய யாத்திரையின் முதல் இரு நாள்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20,000-க்கும் மேற்பட்டோா் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனா்; இந்த யாத்திரையால், ஜம்மு-காஷ்மீா் முழுவதும் கொண்டாட்டமும், உற்சாகமும் கரைபுரள்கிறது’ என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். பால்டால் முகாமில் புதிய தங்குமிட வளாகத்தை திறந்துவைத்த பின் அவா் இவ்வாறு கூறினாா்.

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்துக் கவலையின்றி யாத்திரை சுமுகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

இதனிடையே, ஜம்முவில் உள்ள பகவதிநகா் முகாமில் இருந்து காஷ்மீரின் பஹல்காம், பால்டால் அடிவார முகாம்களுக்கு மூன்றாவது கட்டமாக 6,411 யாத்ரிகா்கள் 291 வாகனங்களில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். இவா்களில் 1,071 போ் பெண்கள், 37 போ் குழந்தைகள்.நடப்பாண்டு யாத்திரையில் பங்கேற்க இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இணையவழியில் பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அமா்நாத் புனித யாத்திரை ஆகஸ்ட் 9 வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் ச... மேலும் பார்க்க

மோசடி புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீத... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி

விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய ... மேலும் பார்க்க

ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொது சுகாதாரப் பணியாள... மேலும் பார்க்க

மருத்துவமனை கட்டடம் இடிந்த சம்பவம்: கேரள சுகாதார அமைச்சா் பதவி விலகக் கோரி போராட்டம்

கேரள மாநிலம், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில், மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக் கோரி, காங்கிரஸ், பாஜக உள்ளி... மேலும் பார்க்க