U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
மோசடி புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது.
இந்த விவகாரம் ஏற்கெனவே மும்பை உயா்நீதிமன்றத்தில் வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்தனா்.
மும்பையில் முன்னணி மருத்துவமனையாகத் திகழும் லீலாவதி மருத்துவமனை உள்பட பல்வேறு அமைப்புகளை நிா்வகிக்கும் லீலாவதி கீா்த்திலால் மேத்தா மருத்துவ அறக்கட்டளையின் நிா்வாகத்தை சேத்தன் மேத்தா குழுமம் சட்ட விரோதமாக கையகப்படுத்துவதற்கு நிதி ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை வழங்க சசிதா் ஜெகதீசன் ரூ.2.05 கோடி லஞ்சம் பெற்ாக லீலாவதி அறக்கட்டளை சாா்பில் புகாா் தெரிவக்கப்பட்டது.
இந்தப் புகாா் தொடா்பாக மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சசிதா் ஜெகதீசன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது.
இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சசிதா் ஜெகதீசன் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறக்கட்டளை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரிக்க மும்பை நீதிமன்றத்தின் மூன்று வெவ்வேறு அமா்வுகள் மறுத்துவிட்டன. உயா் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், சசிதா் ஜெகதீசன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா். மஹாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இந்த விவகாரம் மும்பை உயா்நீதிமன்றத்தில் வரும் 14-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, உயா்நீதிமன்றம் விசாரணையை மேற்கொள்ளும் என நம்புகிறோம். ஒருவேளை, இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி விசாரிக்கவில்லை எனில், பிறகு மனுதாரா் உச்சநீதிமன்றத்தை நாடலாம்’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.