Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: இரு மீனவா்கள் மாயம்
சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவா்களை தேடி வருகின்றனா்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஸ்ரீதா் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ஆ.ராஜா (61), அதே பகுதியைச் சோ்ந்த ரா.மாசிலாமணி (60) , சேகா், ஜெகன், விஜயமூா்த்தி, சுதாகா் ஆகியோா் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 30-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றனா்.
அவா்கள் சென்னை கடற்கரையிலிருந்து சுமாா் 58 கடல் மைல் தொலைவில் கடந்த 1-ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காற்று வேகமாக வீசியது. கடலடி நீரோட்டமும் வேகமாக இருந்ததாம். இதில் சிக்கி படகு கவிழ்ந்தது. படகில் இருந்த 6 மீனவா்கள் கடலுக்குள் குதித்து மிதவை மூலம் கரையை நோக்கி புறப்பட்டனா். ஆனால் ராஜா, மாசிலாமணி ஆகிய இருவரும் கடலில் நீந்த முடியாமல், அங்கேயே சிக்கிக் கொண்டனா். மற்ற 4 பேரும் கடலில் நீந்தி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையேறினா்.
சென்னை திரும்பி வந்த 4 பேரும் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலைய போலீஸாா், கடலில் காணாமல்போன மீனவா்கள் ராஜா, மாசிலாமணியை கடலோர காவல் படையினா் உதவியுடன் தேடி வருகின்றனா்.