செய்திகள் :

மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை - பழிக்குப் பழியா... போலீஸ் விசாரணை!

post image

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் காரைக்காலுக்கு சென்றுள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோயில் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு எதிரே சென்று கொண்டிருந்த போது இரு கார்களில் வந்த மர்ம நபர்கள் மணிமாறன் சென்ற காரை மறித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மணிமாறன்

பின்னர், மணிமாறன் இருந்த கார்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். அதிர்ச்சியடைந்த மணிமாறன் காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடியுள்ளார். அவரை ஓட ஓட துரத்தி சென்ற மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மணிமாறனின் தலை, முகத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் முகம் சிதைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து செம்பனார் கோயில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``பா.ம.க-வின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தவர் தேவமணி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளி மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பழிக்கு பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஐந்து தனிப்படைகள் அமைத்திருக்கிறார்" என்றனர்.

சம்பவம் நடந்த இடம்

``தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உள்கட்சி தேர்தலுக்கான பணியில் கலந்து கொண்ட மணிமாறன் காரைக்கால் திரும்பியுள்ளார். அப்போது, செம்பனார் கோயில் பகுதியில் சென்ற போது காரை வழி மறித்த கூலிப்படை, மணிமாறனை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். அவரின் மறைவுக்கு காரணமான, கூலிப்படையை விரைந்து கைது செய்து, அக்கும்பலுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தென்காசி: மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை; 6 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது!

தென்காசி, கேரளா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் அதிகமாக இருக்கிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகப்படி... மேலும் பார்க்க

`உங்கள் ஆட்சியிலாவது கந்துவட்டிக் கொடுமைக்கு...’ - விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

கந்துவட்டிக் கொடுமையால் தூக்குப் போட்டு தற்கொலைபுதுச்சேரி கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான விக்ரம், இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மினி லாரி ஒன்றை வாங்கிய விக்ரம... மேலும் பார்க்க

கடலூர்: `காதலன் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்!’ - கணவருக்கு கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண் காவலர்

கடலூரைச் சேர்ந்த சோனியா சென்னை ஆவடி ஆயுதப் படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கும், அங்கு கார் ஓட்டுநராகப் பணியாற்றிய கடலூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக ம... மேலும் பார்க்க

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

``மேகாலயா சம்பவத்தை போல செய்தேன்..'' - திருமணமாகி 45 நாளில் கணவனை கொன்ற பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

மேகாலயாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவரை அவரது மனைவி தேனிலவுக்கு அழைத்துச் சென்று கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவத்தை போன்று பீகாரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேகாலயா சம்பவத... மேலும் பார்க்க

சென்னை: காலையில் திருமணம் மாலையில் மாயம்; மணமகளைத் தேடும் குடும்பம்; என்ன நடந்தது?

சென்னை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகவள்ளி. இவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் 2.7.2025-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, "என் கணவர் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். என்னுடைய மகள் அர்ச்... மேலும் பார்க்க